/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ம.தி.மு.க., பொதுக் கூட்டம்: வைகோ பங்கேற்பு
/
ம.தி.மு.க., பொதுக் கூட்டம்: வைகோ பங்கேற்பு
ADDED : ஆக 14, 2025 01:07 AM
கடலுார் : கடலுார் மேற்கு மாவட்ட ம.தி.மு.க., சார்பில் நெய்வேலி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகில் இன்று மாலை பொதுக் கூட்டம் நடக்கிறது.
துணை பொதுச் செயலாளர் மணி தலைமை தாங்குகிறார்.
மேற்கு மாவட்ட செயலாளர் பிச்சை வரவேற்கிறார். கிழக்கு மாவட்ட செயலாளர் ராமலிங்கம், புதுச்சேரி மாநில செயலாளர் பாண்டுரங்கம் முன்னிலை வகிக்கின்றனர்.
மாநில பொருளாளர் செந்திலதிபன், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியதேவன், தீர்மானக்குழு செயலாளர் மணிவேந்தன், மாவட்ட துணை செயலாளர் திராவிட அரசு, மாவட்ட பொருளாளர் மதன், செல்வசெந்தில்குமார் பேசுகின்றனர்.
ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றுகிறார்.
நகர செயலாளர் மனோகரன் நன்றி கூறுகிறார்.
மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி, ஒழுங்கு நடவடிக்கை குழு மோகன சுந்தரம், காஞ்சி சிவராமன், ஒன்றிய செயலாளர் கிருபா, தலைமை செயற்குழு உறுப்பினர் சுதாகர், இளைஞரணி துணை அமைப்பாளர் சவுந்தரரராஜன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.