ADDED : நவ 18, 2024 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை, ; பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு பவர் கம்பெனி இணைந்து, மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றனர்.
முகாமில், தமிழ்நாடு பவர் கம்பெனி முருகன், சரவணன், ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி ரெங்கசாமி, செய்தி தொடர்பாளர்கள் சம்பத், ராமமூர்த்தி, பேராசிரியர் ரெங்கசாமி, வார்டு உறுப்பினர் வசந்தா உட்பட பலர் பங்கேற்றனர்.