/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மருத்துவ முகாம் : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
மருத்துவ முகாம் : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 12, 2025 03:32 AM

கடலுார்: கடலுார் அடுத்த கரைமேடு ஊராட்சியில், தி.மு.க.,சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை டாக்டர் பிரவீன் அய்யப்பன் செய்திருந்தார். டாக்டர் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்றனர்.
50க்கும் மேற்பட்டோர் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். கண் பார்வை பிரச்னை கண்டறியப்பட்ட 200 பேருக்கு, டாக்டர் பிரவீன் அய்யப்பன் தனது சொந்த செலவில் கண் கண்ணாடி வழங்க ஏற்பாடு செய்தார்.
நிகழ்ச்சியில், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், நிர்வாகிகள் சுப்பையா, தமிழ்வாணன், கோதண்டம், வேணு, மணிமாறன், பாஸ்கர், நந்தன், ரவி, பரத், பால்ராஜ், ஆனந்த், சேகர், சக்திவேல், முன்னாள் கவுன்சிலர் பழனிசாமி, அருண்சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.