
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி, தி.மு.க., தெற்கு ஒன்றியம் மற்றும் அகிலேஷ் மருத்துவமனை ஆகியன சார்பில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.
விருத்தாசலம் கடைவீதியில் உள்ள அகிலேஷ் மருத்துவமனையில் நடந்த முகாமை ஒன்றிய செயலாளர் வேல்முருகன் துவக்கி வைத்தார். மருத்துவர்கள் தேவாரம், பத்ம பிரியதர்ஷினி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் சர்க்கரை, சிறுநீரகம், கல்லீரல் செயல்பாடு பரிசோதனை, கொழுப்பு, தைராய்டு அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
ஒன்றிய பொருளாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய துணை செயலாளர்கள் முத்துவேல், சாரங்கபாணி, அருள், மகேஷ், ஏழுமலை, மணிமாறன், இளைஞரணி துணை அமைப்பாளர் வெங்கடேசன், அசோக் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில், 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.