/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டம்
/
நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டம்
ADDED : நவ 01, 2025 02:13 AM
நெல்லிக்குப்பம்: தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நெல்லிக்குப்பத்தில் நடந்தது.
தலைவர் கண்ணன் தலைமைதாங்கினார்.மாநில பொதுச் செயலாளர் மெய்யழகன் தீர்மானங்கள் குறித்து விளக்கினார்.
கூட்டத்தில்,நுகர்வோர் வாங்கும் பொருட்களுக்கு கட்டாயம் உரிய ரசீது வழங்க வேண்டும், நெல்லிக்குப்பம் ஓட்டல்களில் ரசீது கொடுப்பதில்லை.உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு செய்து ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் செயல்படாத பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைச்செயலாளர் ஆறுமுகம்,ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ்,செயலாளர் பாரத்,சட்ட ஆலோசகர் சரண்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

