/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்த கூட்டம்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்த கூட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்த கூட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்த கூட்டம்
ADDED : அக் 30, 2025 11:17 PM
காட்டுமன்னார்கோவில்:  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து  அனைத்து கட்சிகள் பங்கேற்ற  கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகம் கூட்ட அரங்கில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் ராணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் பிரகாஷ் தேர்தல் தாசில்தார் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் தி.மு.க.,உள்ளிட்ட  அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர்கள் சேர்த்தல், நீக்குதல் குறித்தும் மேல் முறையீடு செயல்முறை குறித்தும் வீடுகளுக்கு சென்று கணக்கெடுக்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.