/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உறுப்பினர் சேர்க்கை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
உறுப்பினர் சேர்க்கை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 05, 2025 03:27 AM

கடலுார்:கடலுாரில் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை பணியில் அய்யப்பன் எம்.எல்.ஏ., ஈடுபட்டார்.
கடலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தி.மு.க., சார்பில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்பதை வலியுறுத்தி தீவிர உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. கடலுாரில் அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி வீடு, வீடாக நேரில் சென்று தி.மு.க., அரசின் சாதனைகள் மற்றும் கடலுார் சட்டசபை தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் தெரிவித்து தீவிர உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார்.
மேலும் கட்சியினரையும் வீடு, வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட அறிவுறுத்தினார்.
முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், நிர்வாகிகள் மணி, சதீஷ், தெய்வநாயகம், செல்வராஜ், ரமேஷ், செந்தில், பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.