sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

செய்தி சில வரிகளில்...

/

செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...


ADDED : செப் 27, 2024 05:25 AM

Google News

ADDED : செப் 27, 2024 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண் பரிசோதனை முகாம்


பெண்ணாடம் லயன்ஸ் கிளப், கோவை சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நடந்த கண் பரிசோதனை முகாமிற்கு, சங்க தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். சாசன தலைவர் ஞானபிரகாசம், கூட்டு மாவட்ட தலைவர் ரத்தினசபாபதி முன்னிலை வகித்தனர். பொருளாளர் பாண்டியன் வரவேற்றார். லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பங்கேற்றனர். சங்கரா கண் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

வீடு கட்ட கடனுதவி வழங்கல்


விருத்தாசலம் ஒன்றியத்தில், 2024 - 25ம் ஆண்டிற்கு, 316 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு கூட்டுறவு வங்கி சார்பில் தலா 1 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்காக விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில், பயனாளிகளிடம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. சரக மேற்பார்வையாளர் ஆறுமுகம், பி.டி.ஓ.,கள் இப்ராஹிம், மோகனாம்பாள் ஆகியோர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டனர்.

மரவள்ளியில் பூச்சி; அதிகாரிகள் ஆய்வு


மங்களூர் ஒன்றியத்தில் வெள்ளை ரோஸ், குங்கும ரோஸ், தாய்லாந்து, பர்மா ரக மரவள்ளி செடிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சிறுபாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மரவள்ளி செடிகளில் மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மங்களூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அருள்தாசன் தலைமையிலான அதிகாரிகள் குழு நோய் பாதித்த வயல்களை ஆய்வு செய்து, அதனை கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர். வேளாண் அலுவலர் ராஜ்குமார் உடனிருந்தார்.

பயிர் காப்பீடு: விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்


வேப்பூரில் நல்லுார் ஒன்றிய வேளாண் துறை சார்பில் நடப்பாண்டு ரபி பருவ பிரதம மந்திரி காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மானாவாரி பயிரான மக்காச்சோளத்தை சாகுபடி விவசாயிகளுக்கு அக்டோபர் 31ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் துண்டு பிரசுரங்களை வழங்கி அறிவுறுத்தினார். வேளாண் அலுவலர்கள் கதிரேசன், ரத்னா, ரம்யா, விக்னேஷ், சவுந்தரராஜன் உடனிருந்தனர்.

டிரான்ஸ்பார்மர்கள் இயக்கம்


பெண்ணாடம் மற்றும் மாளிகைக்கோட்டம் பீடரில் தலா 4 லட்சத்து 20 ஆயிரத்து 760 ரூபாய் செலவில் 63 கே.வி.ஏ., திறனுடைய 4 புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைக்கப்பட்டது. பெண்ணாடம் துணைமின் நிலைய உதவி செயற் பொறியாளர் விஜயலட்சுமி, நகர உதவி பொறியாளர் வெங்கடேசன், போர்மேன் ரவிச்சந்திரன், வார்டு கவுன்சிலர் விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு பிரசாரம்


நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் எச்.ஐ.வி., பால்வினை நோய் தொற்று குறித்து நடந்த தெருமுனை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு, ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் அமிர்தா தேவி, எய்ட்ஸ் கட்டுபாட்டு அலகு மாவட்ட மேலாளர் செல்வம் தலைமை தாங்கினர். ஒன்றிய கவுன்சிலர் சுதாகர், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் எச்.ஐ.வி., குறித்து கலை நிகழ்ச்சி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

பொறியாளர் தின விழா


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மின் பொறியியல் துறை சார்பில் நடந்த தேசிய பொறியாளர்கள் தின விழாவிற்கு மாணவர்கள் சங்கம் காயத்ரி வரவேற்றார். ஆலோசகர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். உதவி பொறியாளர் செந்தில்குமார் சுப்ரமணியன் மின்சார சேமிப்பு முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாணவர்களுக்கு வினாடி வினா, தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு, கட்டுரை மற்றும் ஓவிய போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்


கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் அரிகிருஷ்ணன் விளக்கவுரையாற்றினார். நிர்வாகிகள் கருணாகரன், காசிநாதன், ஆதிசங்கரன் வாழ்த்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், வருமான வரி உச்சவரம்பை 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். தேசிய கல்விக்கொள்கையை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு


சிதம்பரம் அண்ணாமலை நகரில் வீரா கிரிக்கெட் அணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 32 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், நெய்வேலி மார்கம் பாய்ஸ் அணி முதலிடமும், அண்ணாமலை நகர் வீரா அணியினர் இரண்டாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பேரூராட்சி சேர்மன் புயல்மணி மணிபாரதி, குணசேகரன் ஆகியோர் பரிசு வழங்கினர். மேலும் வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டது.

புரவலர் பட்டம் சான்றிதழ் வழங்கல்


பெண்ணாடம் கிளை நுாலகம் சார்பில், நடந்த நுாலக புரவலர் பட்டயம் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு, வாசகர் வட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர்கள் முத்துகிருஷ்ணன், ஆறுமுகம், ஓய்வுபெற்ற வேளாண் துறை அலுவலர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர். நுாலகர் வீராசாமி வரவேற்றார். வாசகர்கள், வாசகர் வட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், முருகன்குடி முருகன், கவிஞர் முருகையரசு உட்பட 11 பேருக்கு நுாலக புரவலர் பட்டயம் சான்றிதழை பெண்ணாடம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழங்கினார்.






      Dinamalar
      Follow us