
நடராஜருக்கு அபிேஷகம்
நடுவீரப்பட்டு கைலசாநாதர் கோவிலில் நேற்று புரட்டாசி மாதம் சதுர்த்தசி நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை விநாயகர்,சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நகராட்சிக்கு புதிய வாகனம்
நெல்லிக்குப்பம் நகராட்சியில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய வாகன வசதியில்லை. அதை நிவர்த்தி செய்யும் வகையில், மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ. 46 லட்சம் மதிப்பில் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் டாங்கர் லாரியை வழங்கியது.
சேர்மன் ஜெயந்தி மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.கமிஷ்னர் கிருஷ்ணராஜன், இன்ஜினியர் வெங்கடாஜலம், தி.மு.க.தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், வி.சி.நகர செயலாளர் திருமாறன், கவுன்சிலர் முத்தமிழன் பங்கேற்றனர்.
முகவர்கள் ஆர்ப்பாட்டம்
தொழுதுார் எல்.ஐ.சி., அலுவலகம் முன், எல்.ஐ.சி., முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செய்தி தொடர்பாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். துணைச் செயலர்கள் சந்திரகலா, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
உறுப்பினர்கள் முத்துசாமி, ராமலிங்கம், செந்தில்நாதன், நாகராஜன், லட்சுமி முருகன், கருணாகரன், மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பாலிசிதாரர்களுக்கு போனஸ் உயர்த்தி வழங்குவது, ஜி.எஸ்.டி., வரியை நீக்குவது குறிப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
வேகத்தடை அமைக்க கோரிக்கை
விருத்தாசலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில், பெண்ணாடம் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில், பெண்ணாடம் புதிய பஸ் நிலையம் பகுதியில் வேளாண்மை விரிவாக்க மையம், கால்நடை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
இங்கு வரும் பொது மக்கள் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையை கடந்து செல்ல வேண்டும். இப்பகுதியில் வேகத்தடை இல்லாததால், வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால், சாலையை கடக்க முயலும் பொது மக்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைவதுடன், உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
எனவே, பெண்ணாடம் புதிய பஸ் நிலையம் பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க, செயல்வீரர்கள் கூட்டம்
சேத்தியாத்தோப்பு அடுத்த சாக்காங்குடியில் கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் ராமராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட இளைஞரணி தலைவர் வீரமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர்கள் செந்தமிழ்செல்வன், சுனிதாபாரதி, மணிமேகலை ரவிச்சந்திரன், பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் குமார், ஆனந்திரவிச்சந்திரன், அய்யாதுரை ஆகியோர் வகித்தனர்.
கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன் அனைவரையும் வரவேற்றார். கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., அம்மா பேரவை துணை செயலாளர் அருளழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அங்கக வேளாண் பயிற்சி
சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை கிராமத்தில் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை குறித்த பயிற்சி நடந்தது. கடலுார் வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ், வேளாண் அலுவலர் சிவப்பிரியன், எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைமை கரும்பு அலுவலர் ரவிக்கிருஷ்ணன், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் ஆனந்தன் ஆகியோர், மண் வளம் குறித்து பேசினர்.