/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா மாஜி அமைச்சர் மாலை அணிவிப்பு
/
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா மாஜி அமைச்சர் மாலை அணிவிப்பு
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா மாஜி அமைச்சர் மாலை அணிவிப்பு
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா மாஜி அமைச்சர் மாலை அணிவிப்பு
ADDED : ஜன 18, 2025 02:10 AM

கடலுார்: தமிழத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கடலுார், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., திருவுருவ சிலைக்கு, முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமையில் அ.தி.மு.க., வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன், மீனவரணி தங்கமணி, பகுதி செயலாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர்.
எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சுப்ரமணி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், வர்த்தகபிரிவு வரதராஜன், பகுதி செயலாளர் கந்தன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தெய்வ பக்கிரி, எம்.ஜி,ஆர்.மன்றம் கோபு, ஏழுமலை, ஒன்றிய நிர்வாகிகள் வேல்முருகன், கிரிஜா, செந்தில்குமார், மாவட்ட பிரிதிநிதி தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.