ADDED : டிச 26, 2025 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ., சத்யாபன்னீர்செல்வம் வீட்டின் முன்பு முன்னாள் நகராட்சி சேர்மன் பன்னீர்செல்வம் தலைமையில் எம்.ஜி.ஆர்., 38வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின், அன்னதானம் வழங்கினர்.

