ADDED : ஜூலை 25, 2025 02:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாநில எம்.ஜி.ஆர்.,இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன், தலைமை தாங்கி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
முன்னாள் நகர செயலாளர்கள் குமரன், முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் வினோத்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் பரணிமுருகன், தஷ்ணா, எம்.ஜி.ஆர்.,மன்றம் பைந்தமிழ் குமரன், நெசவாளர் பிரிவு குணசேகரன், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் அசோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.