/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொது செயலாளருக்கு வரவேற்பு எம்.ஜி.ஆர்., இளைஞரணி அழைப்பு
/
பொது செயலாளருக்கு வரவேற்பு எம்.ஜி.ஆர்., இளைஞரணி அழைப்பு
பொது செயலாளருக்கு வரவேற்பு எம்.ஜி.ஆர்., இளைஞரணி அழைப்பு
பொது செயலாளருக்கு வரவேற்பு எம்.ஜி.ஆர்., இளைஞரணி அழைப்பு
ADDED : ஜூலை 12, 2025 03:37 AM

கடலுார்: கடலுாருக்கு இன்று வருகை தரும் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டுமென, எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, கடலுார் மாவட்டத்தில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் இன்று (12ம் தேதி) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று மாலை கடலுார், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் பேசுகிறார்.
எனது தலைமையில், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர், மாநகராட்சி கவுன்சிலர் வினோத்குமார், நிர்வாகி சரவணன் ஏற்பாட்டில் கடலுாரில் பல்வேறு இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. 5,000த்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.
எனவே, நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.