/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்தடையை கண்டித்து நள்ளிரவில் சாலை மறியல் விருதை - திட்டக்குடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

ADDED : ஏப் 14, 2025 11:57 PM

பெண்ணாடம்,; பெண்ணாடத்தில் மின்தடையை கண்டித்து நள்ளிரவில் பொதுமக்கள் நடத்திய சாலை மறியலால் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் போக்குவரத்து பாதித்தது.
பெண்ணாடம் பேரூராட்சி, அம்பேத்கர் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் அந்தப்பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் மீண்டும் மின்தடை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நள்ளிரவு 12:00 மணியளவில் 50 க்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி, மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 12:30 மணியளவில் மின்சாரம் மீண்டும் கொடுக்கப்பட்டது.
இதன் பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
மின்தடையை கண்டித்து நள்ளிரவில் நடத்திய சாலை மறியலால், விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் ௩௦ நிமிடம் போக்குவரத்து பாதித்தது.