/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உலக நன்மை வேண்டி இணைய வழியில் செவ்வாடை பக்தர்கள் கோடி அர்ச்சனை
/
உலக நன்மை வேண்டி இணைய வழியில் செவ்வாடை பக்தர்கள் கோடி அர்ச்சனை
உலக நன்மை வேண்டி இணைய வழியில் செவ்வாடை பக்தர்கள் கோடி அர்ச்சனை
உலக நன்மை வேண்டி இணைய வழியில் செவ்வாடை பக்தர்கள் கோடி அர்ச்சனை
ADDED : பிப் 19, 2024 05:38 AM

கிள்ளை: உலக நலம் பெற வேண்டி, சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், 350 செவ்வாடை பக்தர்கள், இணையவழியில், கோடி அர்ச்சனை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீட நாயகர் பங்காரு அடிகளின் 84வது, பிறந்த நாளை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி, குரு போற்றி கோடி அர்ச்சனை செய்ய, ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்கள், ஆதிபராசக்தி வழிப்பாட்டு மன்றங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த வகையில், சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் 350 செவ்வாடை பக்தர்கள் நேற்று இணைய வழியில்,கோடி அர்ச்சனை வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஆதிபராசக்திக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைநடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
நிர்வாகிகள் பாலகுமார், அருளானந்தம், அர்ச்சுனன், ஞானகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் கிருபானந்தன் கூறுகையில், 'கோடி அர்ச்சனையில், பண்ருட்டி சக்தி பீடத்தில் 108 பேர், பெண்ணாடம் - 50 பேர், நெய்வேலி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் 375 பேர் உட்பட மாவட்டத்தில் உள்ள 27 வழிபாட்டு மன்றங்களில் 3,000 பேர் பங்கேற்றனர், என்றார்.

