/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மினி குடிநீர் தொட்டிகள்: எம்.எல்.ஏ., திறப்பு
/
மினி குடிநீர் தொட்டிகள்: எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : மார் 07, 2024 01:22 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பகுதிகளில் மூன்று இடங்களில் மினி வாட்டர் டேங்குகளை, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் நிதியில் தலா 3 லட்சத்தில் போர்வெல்லுடன் கூடிய மினி வாட்டர் டேங்க், சேத்தியாத்தோப்பில் கிளாங்காடு புதுத்தெரு, சென்னிநத்தம், சர்க்கரை ஆலை அருகே ஆகிய மூன்று இடங்களில் அமைக்கப்பட்டது. அதனை, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஜே., பேரவை மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன், ஜெயசீலன், ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி, ஒன்றி அவைத் தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் நகர செயலாளர் நன்மாறன், நகர செயலாளர் மணிகண்டன், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராமலிங்கம் பங்கேற்றனர்.

