
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை பேரூராட்சியில், ரூ.23 லட்சம் மதிப்பில் புதியதாக வாங்கப்பட்ட மினி லாரி வழங்கும் விழா நடந்தது.
பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் குப்பைகளை எடுத்துச்செல்ல போதுமான மினி லாரிகள் இல்லாததால் துாய்மைப் பணியாளர்கள் சிரமப்பட்டனர்.
இதனால், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ரூ. 23 லட்சம் மதிப்பில் புதியதாக ஒரு மினி லாரி வாங்கப்பட்டது.
மினி லாரியை, துாய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்கும் விழா நேற்று நடந்தது.
துணை சே ர்மன் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மயில்வாகனன் முன்னிலை வகித்தார். மினி லாரியின் சாவியை, சேர்மன் தேன்மொழி சங்கர், துாய்மைப் பணியாளர்களிடம் வழங்கினார்.
விழாவில், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், தலைமை எழுத்தர் தமிழரசி, துப்புரவு ஆய்வாளர் மலர்விழி, கவுன்சிலர்கள், ஆனந்தன், ஜாபர் ஷரீப், ஒன்றிய பிரதிநிதி கோமு,உட்பட பலர் பங்கேற்றனர்.