UPDATED : அக் 20, 2026 04:47 PM
ADDED : அக் 20, 2026 04:44 PM

பெண்ணாடம்: பெ.கொல்லத்தங்குறிச்சியில் பழுதாகி, காட்சிப்பொருளான மினிடேங்க் மோட்டாரை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை ஊராட்சி, பெ.கொல்லத்தங்குறிச்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சித்துறை சார்பில், 2 லட்சம் ரூபாய் மதிப்பில் மினிடேங்க் அமைக்கப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
போதிய பராமரிப்பின்றி உள்ள மினி டேங்க் மோட்டார் கடந்த இரு மாதங்களுக்கு முன் பழுதானது. ஆனால் இதுவரை ஊராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை. இதனால் கிராம மக்கள் குடிநீருக்கு சிரமம் அடைகின்றனர்.
எனவே, பெ.கொல்லத்தங்குறிச்சியில் காட்சிப்பொருளான மினி டேங்க் மோட்டாரை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
