/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுரங்க பட்டய படிப்பு வகுப்பு துவக்க விழா
/
சுரங்க பட்டய படிப்பு வகுப்பு துவக்க விழா
ADDED : ஆக 21, 2025 10:49 PM

சிதம்பரம், ;சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் புலத்தில், சுரங்க பட்டய படிப்பு மாணவர்களுக்கான, 2025-26ம் கல்வி ஆண்டிற்கான வகுப்பு துவக்க விழா நடந்தது.
என்.எல்.சி., நிறுவன சுரங்கங்கள் மற்றும் நிலங்களுக்கான செயல் இயக்குனர் ஜாஸ்பர் ரோஸ் தலைமை தாங்கி வகுப்பை துவக்கி வைத்து பேசினார். சுரங்க பட்டய படிப்பின் இயக்குனர் பேராசிரியர் சரவணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் திருப்பதி பேசினார். இணைப் பேராசிரியர் சிவராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விழாவில், இணை பேராசிரியர்கள் வினோத்குமார், பாலமுருகன், பிரேம்குமார், உதவி பேராசிரியர் ராஜசோமசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
பேராசிரியர் பழனிவேல்ராஜா நன்றி கூறினார்.