/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் அழைப்பு
/
வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் அழைப்பு
ADDED : செப் 11, 2025 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம்: பெண்ணாடத்தில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென, அமைச்சர் கணேசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடலுார் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியன இணைந்து பெண்ணாடம் லோட்டஸ் பள்ளியில் நாளை (13ம் தேதி) வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
முகாமில், 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் படித்த மாணவர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று பயன்பெற வேண்டும்.