/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சர் அழைப்பு
/
செயல் வீரர்கள் கூட்டம் அமைச்சர் அழைப்பு
ADDED : மே 17, 2025 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுபாக்கம்: நெய்வேலியில் நடக்கும் தி.மு.க., மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்க மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நாளை 18ம் தேதி காலை 9:00 மணிக்கு நெய்வேலி தொ.மு.ச., அலுவலகத்தில் நடக்கிறது. கடலூர் மண்டல பொறுப்பாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை தாங்குகிறார். கூட்டத்தில், சட்டசபை தேர்தல் பணிகள், கட்சி பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.