/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., ஆலோசனை கூட்டம் அமைச்சர் கணேசன் அழைப்பு
/
தி.மு.க., ஆலோசனை கூட்டம் அமைச்சர் கணேசன் அழைப்பு
ADDED : அக் 30, 2025 11:20 PM

சிறுபாக்கம்:  கடலூர் தி.மு.க., மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டசபைத் தொகுதிகளில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கட்சியினருக்கு கடலூர் தி.மு.க.,  மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின்படி, கடலூர் தி.மு.க., மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டசபைத் தொகுதிகளில் கிளை  செயலாளர்கள், பாகநிலை முகவர்கள், பாக இணைய தள முகவர்கள் ஆலோசனைக் கூட்டம், என்னுடைய(கணேசன்)  தலை மையில் நாளை  (1ம் தேதி) நடக்கிறது.
திட்டக்குடி தொகுதியில், தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் சந்திரசேகர் முன்னிலையில், திட்டக்குடி, ராமலிங்கம் அஞ்சுகம் திருமண மண்டபத்திலும்,  விருத்தாசலம் தொகுதியில், தி.மு.க., தொகுதி பொறுப்பாளர் குலோத்துங்கன் முன்னிலையில் விருத்தாசலம், சிவபூஜா திருமண மண்டபத்தில் நடக்கிறது.
நெய்வேலி தொகுதியில், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மற்றும் தொகுதி பொறுப்பாளர் துரைசாமி  முன்னிலையில், கீழக்கொல்லை, தேவி மஹாலிலும்,  பண்ருட்டி தொகுதியில் தி.மு.க., அவைத் தலைவர் நந்தகோபால கிருஷ்ணன் மற்றும் தொகுதி பொறுப்பாளர் புஷ்பராஜ் முன்னிலையில், பண்ருட்டி, ஆர்.கே., கண்வென்ஷன் மஹாலில் நடக்கிறது.
இதில்  தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, பேரூர், ஒன்றிய செயலர்கள், தொகுதி பார்வையாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி பார்வையாளர்கள், பாக  ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

