/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டப் ப ணிகளில் முதல்வர் அக்கறை அமைச்சர் கணேசன் பெருமிதம்
/
திட்டப் ப ணிகளில் முதல்வர் அக்கறை அமைச்சர் கணேசன் பெருமிதம்
திட்டப் ப ணிகளில் முதல்வர் அக்கறை அமைச்சர் கணேசன் பெருமிதம்
திட்டப் ப ணிகளில் முதல்வர் அக்கறை அமைச்சர் கணேசன் பெருமிதம்
ADDED : மே 06, 2025 12:18 AM

சிறுபாக்கம்; மக்களுக்கான வளர்ச்சி திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் முதல்வர் அக்கறையுடன் இருப்பதாக அமைச்சர் கணேசன் பேசினார்.
சிறுபாக்கம் அடுத்த அரசங்குடியில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு மற்றும் குறைக்கேட்பு கூட்டம் நடந்தது. சப் கலெக்டர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். தாசில்தார் செந்தில்வேல், ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகன் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் கணேசன் திட்டப்பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கோடை காலத்தில் தடையின்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதே போல், சிறுபாக்கம், வடபாதி, எஸ்.நரையூரில் உள்ளிட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்து பேசுகையில், 'மக்களுக்கான வளர்ச்சி திட்டப்பணிகளை துறை வாரியாக கவனித்து முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, கிராமங்கள் தோறும் திட்டப்பணிகளை ஆய்வு செய்கிறோம். மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை கிடைக்காதவர்கள், அதிகாரிகளிடம் மனு அளித்து பயன் பெறலாம்' என்றார்.
பி.டி.ஓ.,க்கள் முருகன், சண்முக சிகாமணி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சின்னசாமி, முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், தி.மு.க., நிர்வாகிகள் நிர்மல், ராமதாஸ், வெங்கடேசன், மருதமுத்து, பாப்பாத்தி ராமலிங்கம், முருகேசன், ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் வேலாயுதம் உடனிருந்தனர்.