/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கறவை மாடு வாங்க 500 பெண்களுக்கு கடன் வழங்க உத்தரவு: அமைச்சர் கணேசன்
/
கறவை மாடு வாங்க 500 பெண்களுக்கு கடன் வழங்க உத்தரவு: அமைச்சர் கணேசன்
கறவை மாடு வாங்க 500 பெண்களுக்கு கடன் வழங்க உத்தரவு: அமைச்சர் கணேசன்
கறவை மாடு வாங்க 500 பெண்களுக்கு கடன் வழங்க உத்தரவு: அமைச்சர் கணேசன்
ADDED : நவ 21, 2024 05:50 AM

வேப்பூர்: கறவை மாடுகள் வாங்க 500 பெண்களுக்கு கடன் வழங்க உத்தரவிட்டுள்ளதாக, அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.
வேப்பூர் அடுத்த கழுதுார் ஊராட்சியில், மத்திய கூட்டுறவு வங்கி நிதி ரூ.13.50 லட்சத்தில் எடை மேடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கூட்டுறவு துறை மண்டல பதிவாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். விருத்தாசலம் துணை பதிவாளர் சவிதா, சப் கலெக்டர் சையத் முகம்மது, மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் கருணாநிதி வரவேற்றார்.
அமைச்சர் கணேசன் எடை மேடையை திறந்து வைத்தார். மாவட்ட கவுன்சிலர் செல்வி ராஜரத்தினம், திட்டக்குடி தாசில்தார் அந்தோணிராஜ், கழுதுார் வேளாண் கூட்டுறவு வங்கி செயலர் மாரிமுத்து, தி.மு.க., ஒன்றிய செயலர்கள் பாவாடை கோவிந்தசாமி, செங்குட்டுவன், அமிர்தலிங்கம், தி.மு.க., நிர்வாகிகள் வெங்கடேசன், பாண்டுரங்கன், பாபு, சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில் அமைச்சர் கணேசன் பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து பல திட்டங்களை செயல்படுத்துகிறார். அரசு மற்றும் தனியார் துறைகளில் பொறுப்புடனும், திறமையுடன் செயல்படுவதால் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்.
வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் கறவை மாடுகள் வாங்க 500 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம், பராமரிப்புக்கு தலா ரூ.14 ஆயிரம் கடன் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என, தெரிவித்தார்.