/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அமைச்சர் கணேசன் பங்கேற்பு
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அமைச்சர் கணேசன் பங்கேற்பு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அமைச்சர் கணேசன் பங்கேற்பு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அமைச்சர் கணேசன் பங்கேற்பு
ADDED : ஜூலை 27, 2025 11:17 PM
ராமநத்தம்: ராமநத்தம் அடுத்த கீழக்கல்பூண்டி ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். பின், அவர் பேசுகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் மூலமாக கிராம மக்களின் குறைகளை சரி செய்ய, அனைத்து துறை அதிகாரிகளும் ஒரே இடத்தில் சேர்ந்து, துறைகள் சார்ந்த மனுக்கள் பெறுகின்றனர்.
இதன் மூலமாக 30 நாட்களுக்குள் மனுக்கள் மீது பரிசீலனை செய்து, தீர்வு காணப்படும்' என்றார்.
சப் கலெக்டர் விஷ்ணு பிரி யா முன்னிலை வகித்தார். மங்களூர் பி.டி.ஓ., சண்முக சிகாமணி வரவேற்றார். மங்களூர் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் செங்குட்டு வன், அமிர்தலிங்கம், திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு, மாவட்ட பிரதிநிதி சேகர், ம ங்களூர் பி.டி.ஓ., முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
முகாமில், 600க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில், 70 பயனாளிகளுக்கு பட்டா, 10 பயனாளிகளுக்கு ரேஷன் கார்டுகள், வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

