/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்களை தேடி மருத்துவ முகாம் அமைச்சர் துவக்கி வைப்பு
/
மக்களை தேடி மருத்துவ முகாம் அமைச்சர் துவக்கி வைப்பு
மக்களை தேடி மருத்துவ முகாம் அமைச்சர் துவக்கி வைப்பு
மக்களை தேடி மருத்துவ முகாம் அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஜன 11, 2024 04:22 AM

நெய்வேலி: நெய்வேலி டவுன்ஷிப், வட்டம் 24ல் உள்ள என்.எல்.சி., திருமண மண்டபத்தில் பொது சுகாதாரத் துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவ முகாம் நடந்தது.
கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி, மனித வளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப், எம்.எல்.ஏ.,க்கள் சபா ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், எஸ்.பி.,ராஜாராம் முன்னிலை வகித்தனர். சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கீதா ராணி வரவேற்றார்.
அமைச்சர் கணேசன் முகாமை துவக்கி வைத்து பேசுகையில், 'மருத்துவத் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
சுகாதாரத்துறை மூலமாக இல்லம் தேடி மருத்துவ திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகிறது' என்றார்.
முகாமில், நெய்வேலி என்.எல்.சி., யில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எடை, உயரம், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள் செய்து, ஆலோசனை வழங்கப்பட்டது.
விழாவில், வட்டார மருத்துவ அலுவலர் அகிலா, டாக்டர்கள் அருண், அறிவொளி, என்.எல்.சி., தொ.மு.ச., பொதுச் செயலாளர் பாரி, பொருளாளர் அய்யப்பன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், நெய்வேலி நகர அவைத்தலைவர் நன்மாற பாண்டியன், தொ.மு.ச., முன்னாள் பொருளாளர் குருநாதன், கடலுார் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜேஷ், சதாம், மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், தொண்டரணி துணைத் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றனர்.