/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாருக்கு 25ல் உதயநிதி வருகை விழா இடத்தை அமைச்சர் ஆய்வு
/
கடலுாருக்கு 25ல் உதயநிதி வருகை விழா இடத்தை அமைச்சர் ஆய்வு
கடலுாருக்கு 25ல் உதயநிதி வருகை விழா இடத்தை அமைச்சர் ஆய்வு
கடலுாருக்கு 25ல் உதயநிதி வருகை விழா இடத்தை அமைச்சர் ஆய்வு
ADDED : நவ 23, 2024 06:52 AM
கடலுார் : கடலுாரில் துணை முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் இடத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி நாளை மறுநாள் 25ம் தேதி கடலுார் வருகை தருகிறார். அன்று காலை, கம்மியம்பேட்டை, செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
விழா நடைபெறும் இடத்தை நேற்று பார்வையிட்ட அமைச்சர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆய்வுக் கூட்டம் நடத்தி, அறிக்கை பெற்று தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, வேளாண் துறை சார்பில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் குழு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கடந்த 2, 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் 7,093 எக்டர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 33 சதவீதத்திற்கும் மேல் பயிர் பாதிப்பு இருந்தால் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அந்தந்த பகுதிகளில் பயிர் பாதிப்பு கணக்கீடு பணியில் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். 19 மாவட்டங்களில் முதற்கட்ட தகவல்படி 3,989 எக்டர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடலுார் மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 400க்கும் மேற்பட்ட இடங்கள் மழை பாதிப்பு இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. மக்களை தங்க வைக்க முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்.பி.,ராஜாராம், மேயர் சுந்தரி ராஜா, கமிஷனர் அனு, தி.மு.க., மாநகர செயலாளர் ராஜா உடனிருந்தனர்.

