/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுாரில் மகளிரணி கூட்டம் பங்கேற்க அமைச்சர் அழைப்பு
/
வடலுாரில் மகளிரணி கூட்டம் பங்கேற்க அமைச்சர் அழைப்பு
வடலுாரில் மகளிரணி கூட்டம் பங்கேற்க அமைச்சர் அழைப்பு
வடலுாரில் மகளிரணி கூட்டம் பங்கேற்க அமைச்சர் அழைப்பு
ADDED : நவ 08, 2024 05:32 AM
கடலுார்: வடலுாரில் இன்று நடக்கும் தி.மு.க., மகளிரணி கூட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர், அமைச்சர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:
வடலுார், பண்ருட்டி சாலையில் உள்ள மங்கையர்கரசி திருமண மண்டபத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க., மகளிர் அணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் கூட்டம் இன்று (8ம் தேதி) மாலை 3:00 மணிக்கு நடக்கிறது.மாநில, மாவட்ட மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
கூட்டத்தில் கடலுார் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், முன்னால், இந்நாள் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணியின் திரளாக பங்கேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.