/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் புதிய வழித்தடத்தில் 2 பஸ்கள் அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு
/
சிதம்பரத்தில் புதிய வழித்தடத்தில் 2 பஸ்கள் அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு
சிதம்பரத்தில் புதிய வழித்தடத்தில் 2 பஸ்கள் அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு
சிதம்பரத்தில் புதிய வழித்தடத்தில் 2 பஸ்கள் அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு
ADDED : ஜன 26, 2025 05:44 AM

சிதம்பரம் : சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவிலில் புதிய வழித்தடத்தில் இரு அரசு டவுன் பஸ்களை, அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.
சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவிலில் இருந்து, புதிய அரசு கல்லுாரி துவங்கப்பட்ட குமராட்சி கீழவன்னியூர் வழித்தடத்தில் இரு அரசு டவுன் பஸ்கள் பொதுமக்கள் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக விடப்பட்டுள்ளது. அதன் துவக்க விழா நேற்று நடந்தது, சிதம்பரம் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
காட்டுமன்னார் கோவில் எம்.எல்.ஏ., சிந்தனைச்செல்வன், சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார், அரசு போக்குவரத்துக் கழக கடலூர் மண்டல பொதுமேலாளர் ராகவன் முன்னிலை வகித்தனர்.
போக்குவரத்து துறை உதவி மேலாளர் பரிமளம், கிருஷ்ணமூர்த்தி, கிளை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன்,நகராட்சி ஆணையர் மல்லிகா, நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், மணிகண்டன், அசோகன், புகழேந்தி, ராஜன், சுதா, தாரணி, லதா, கல்பனா மற்றும் காட்டுமன்னார்கோவில் அரசு கல்லுாரி முதல்வர் மீனா, உடற்கல்வித்துறை இயக்குனர் சரவணன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன், பாலசுப்பிரமணியன், இளங்கோவன், அருள், ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.