/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருவந்திபுரம் கோவில் கும்பாபிேஷக பணி; அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
/
திருவந்திபுரம் கோவில் கும்பாபிேஷக பணி; அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
திருவந்திபுரம் கோவில் கும்பாபிேஷக பணி; அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
திருவந்திபுரம் கோவில் கும்பாபிேஷக பணி; அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
ADDED : ஜன 21, 2025 06:50 AM

கடலுார்; கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் கும்பாபிேஷக பணிகளை அமைச்சர் நேற்று பார்வையிட்டார்.
கடலுார் திருவந்திபுரத்தில், 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்ற தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பக்தர்கள் தினமும் சுவாமி தரிசித்து வருகின்றனர்.
இக்கோவில் கும்பாபிேஷகம் செய்ய முடிவு செய்து, கடந்த ஆண்டு திருப்பணிகள் துவங்கியது. திருப்பணிக்காக அரசு 2.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. கும்பாபிேஷகம் பிப்., 2ம் தேதி நடக்க உள்ள நிலையில் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று, அமைச்சர் பன்னீர்செல்வம் கோவிலில் கும்பாபிேஷக ஏற்பாடுகள் மற்றும் திருப்பணியை பார்வையிட்டார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்.பி., ராஜாராம், அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்திரன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், மாநகர செயலாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் கூறுகையில், 'திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் கும்பாபிேஷக பணிகளுக்கு முதல்வர் உத்தரவின்பேரில் 2.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பணிகள் நடந்து வரும் நிலையில் ஆய்வு செய்துள்ளோம். இந்த ஆட்சியில்தான் அதிகளவு கோவில் கும்பாபிேஷகங்கள் நடந்து வருகிறது. கும்பாபிேஷக பாதுகாப்பு பணிக்காக கோவிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்படும்' என்றார்.