/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளி நுாற்றாண்டு விழா விருதையில் அமைச்சர் பங்கேற்பு
/
அரசு பள்ளி நுாற்றாண்டு விழா விருதையில் அமைச்சர் பங்கேற்பு
அரசு பள்ளி நுாற்றாண்டு விழா விருதையில் அமைச்சர் பங்கேற்பு
அரசு பள்ளி நுாற்றாண்டு விழா விருதையில் அமைச்சர் பங்கேற்பு
ADDED : பிப் 02, 2025 05:17 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நுாற்றாண்டுத் திருவிழாவில், அமைச்சர் கணேசன் பங்கேற்றார்.
விருத்தாசலத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நுாற்றாண்டுத் திருவிழா கொண்டாடப்பட்டது. கூடுதல் கலெக்டர் சரண்யா ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சி.இ.ஓ., எல்லப்பன் வரவேற்றார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., டி.இ.ஓ., துரைபாண்டியன், ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் வாழ்த்தி பேசினர்.
அமைச்சர் கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நுாற்றாண்டு சுடர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து, மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், மாணவர்கள் இணைந்து உறுதிமொழி ஏற்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், நகர செயலாளர் தண்டபாணி, துணை செயலாளர் ராமு, ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கோவிந்தசாமி, இளைஞரணி அமைப்பாளர் பொன்கணேஷ், கவுன்சிலர்கள் பாண்டியன், அன்பழகன், ஜெயலட்சுமி நம்பிராஜன், தீபா மாரிமுத்து உடனிருந்தனர்.
தலைமை ஆசிரியர் வினோத்குமார் நன்றி கூறினார்.