/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வள்ளலார் சர்வதேச மையம் பணி விரைவில் துவங்கும்
/
வள்ளலார் சர்வதேச மையம் பணி விரைவில் துவங்கும்
ADDED : அக் 06, 2024 06:13 AM

வடலுார்: கடலுார் மாவட்டம், வடலுார் வள்ளலார் தெய்வ நிலையத்தில், வள்ளலார் பிறந்த 202வது அவதார தினவிழா நேற்று நடந்தது.
வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று, சத்திய தரும சாலையில் அன்னதானம் வழங்கினர் பின்னர், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
வள்ளலார் பிறந்த தினத்தை காருண்யா தினமாக முதல்வர் அறிவித்து, வள்ளலாருக்கு பெருமை சேர்த்துள்ளார். வாழும் வள்ளலாராக முதல்வர் உள்ளார். வள்ளலாரின் 200வது பிறந்த தினத்தை ஆண்டு முழுவதும் கொண்டாடி வள்ளலாருக்கு பெருமை சேர்த்தவர். அதற்காக 3.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கினார்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வடலுாரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் எனக் கூறி, தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் அத்திட்டத்தை செயல்படுத்தினார்.
இதற்கு சில இடையூறுகள் ஏற்பட்டது. அந்த இடையூறுகள் முடிந்து மீண்டும் பணி தொடரும் சூழல் ஏற்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.