/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு
/
மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 16, 2025 05:37 AM

கடலுார் : மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 3ம் கட்ட சிறப்பு முகாம்கள் நடந்தது.
கடலுார் அடுத்த கே.என்.பேட்டை பவானி அம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளி, சின்ன காரைக்காடு, கம்பளிமேடு, தீர்த்தனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் மற்றும் பூவாணிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 3ம் கட்ட சிறப்பு முகாம்களை அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கோவி செழியன் துவக்கிவைத்தனர்.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், விஷ்ணுபிரசாத் எம்.பி., முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், 'பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையிலும் பல்வேறு சிறப்பு திட்டங்களை தீட்டி முதல்வர் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மகளிர் உரிமை திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.
இத்திட்டத்தின் மூலம் 4 லட்சத்து 50 ஆயிரத்து 134 குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும்,அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும்வகையில் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தினை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது' என்றார்.
அமைச்சர் கோவி செழியன் பேசுகையில், 'மக்கள் இருக்கும் இடங்களிலேயே அனைத்து துறை அலுவலர்களுடன் முகாம்களை நடத்தி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் 90 முகாம்கள் நடக்கிறது. இதில் மனு அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம்' என்றார்.
நிகழ்ச்சியில் மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் கலெக்டர் சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
தீர்த்தனகிரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த சமபந்தியில் அமைச்சர்கள் பொதுமக்களுடன் உணவருந்தினர்.