/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் 3வது வார்டில் அமைச்சர் நிவாரணம்
/
கடலுார் 3வது வார்டில் அமைச்சர் நிவாரணம்
ADDED : டிச 05, 2024 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் மாநகராட்சி 3வது வார்டில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
கடலுார் மாநகராட்சி 3வது வார்டில், மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் ஏற்பாட்டில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன், மாநகராட்சி கமிஷனர் அனு, மேயர் சுந்தரி ராஜா, மாநகர செயலாளர் ராஜா முன்னிலை வகித்தனர்.
அப்போது, மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், நடராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.