/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிட்டிங் அ.தி.மு.க., தொகுதி மீது அமைச்சர் தனி கவனம்
/
சிட்டிங் அ.தி.மு.க., தொகுதி மீது அமைச்சர் தனி கவனம்
சிட்டிங் அ.தி.மு.க., தொகுதி மீது அமைச்சர் தனி கவனம்
சிட்டிங் அ.தி.மு.க., தொகுதி மீது அமைச்சர் தனி கவனம்
ADDED : ஏப் 23, 2025 05:38 AM
கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் அமைச்சர் பன்னீர்செல்வம், குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏ., வாக உள்ளார். சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வசம் மாறியது முதல் அமைச்சர் பன்னீர்செல்வம், சிதம்பரத்தை அவ்வளவாக கண்டுக்கொள்வது இல்லை.
தனது அக்கா மகனை சிதம்பரம் நகர மன்ற தலைவராக உருவாக்கிய நிலையிலும், கட்சி நிகழ்ச்சியை தவிர மற்ற நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்தார். ஆனால் சமீப காலங்களாக அமைச்சர் பன்னீர்செல்வம், சிதம்பரத்தின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார்.
குறிப்பாக, சிதம்பரம் பகுதி வளர்ச்சிக்கு அதிக நிதி பெற்றுத் தருவது, நகர பகுதியில் உள்ள குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை மேம்படுத்துதல், திட்டப் பணிகளை ஆய்வு செய்வது என தீவிரம் காட்டி வருகிறார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கூட சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் கலெக்டருடன் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். சென்னையில் இருந்து அமைச்சர் சொந்த ஊருக்கு வந்தால் சிதம்பரத்திற்கு வராமல் செல்வது இல்லை என்ற நிலை உருவாகியுள்ளன.
இது தி.மு.க.,வினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் எதிர் கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைமை 200 தொகுதி திட்டத்தின்படி, மாவட்ட செயலாளர்கள் தங்களுடைய தொகுதிகள் அனைத்திலும் வெற்றிப் பெற செய்ய வேண்டும் என அனைத்து அமைச்சர்களுக்கும் கட்சி தலைமை நெருக்கடி கொடுக்கிறது.
கிழக்கு மாவட்டத்தில் சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக இருப்பதால், இதனை உடைத்தெறிய அமைச்சர் தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது. வரும் சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தனது உறவினர்களை களம் காண திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகவே தனிக் கவனம் செலுத்துவதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியே எல்லா கணக்குகளும் வர இருக்கும் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி தான் உள்ளன.