தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மனைவி கொலை வழக்கில் மாயமான கணவர் சிக்கினார்

மனைவி கொலை வழக்கில் மாயமான கணவர் சிக்கினார்

மனைவி கொலை வழக்கில் மாயமான கணவர் சிக்கினார்


ADDED : அக் 26, 2025 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2025 01:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: மனைவியை அடித்து கொலை செய்த வழக்கில், தலைமறைவான கணவரை, போலீசார் கைது செய்தனர்.

அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அழகாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 46; இவரது மனைவி சரளா, 39; இருவரும், மனைவியின் சொந்த ஊரான வடக்குப்பாளையத்தில் வசித்தனர்.

குழந்தை இல்லாததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 2018 நவ., 28ல் இரவு, குடிபோதையில் இருந்த ஆறுமுகம், சரளாவை அடித்து கொலை செய்தார். சோழத்தரம் போலீசார், ஆறுமுகத்தை கைது செய்தனர். ஜாமினில் வந்த ஆறுமுகம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தலைமறைவானார்.

சேத்தியாத்தோப்பு போலீசார், ஆறுமுகத்தை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் அழகாபுரத்தில் ஆறுமுகத்தை கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us