/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காணாமல் போன வாலிபர் ஏரியில் சடலமாக மீட்பு
/
காணாமல் போன வாலிபர் ஏரியில் சடலமாக மீட்பு
ADDED : ஜன 29, 2025 11:22 PM

மந்தாரக்குப்பம்: விருத்தாசலத்தில் காணாமல் போன வாலிபர் நெய்வேலி சாம்பல் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் திரு.வி.க., நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார், 27. இவர் கடந்த 27 ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
அவரது தந்தை மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை காட்டுக்கூனங்குறிச்சி நெய்வேலி சாம்பல் ஏரி அருகே இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போன் இருப்பதாக ஊமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் சாம்பல் ஏரியில் தீவீர தேடுதல் பணியில் ஈடுப்பட்ட போது சுரேஷ்குமார் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
இது குறித்து ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்

