/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாரியம்மன் கோவிலில் எம்.எல்.ஏ., அன்னதானம்
/
மாரியம்மன் கோவிலில் எம்.எல்.ஏ., அன்னதானம்
ADDED : ஜூலை 27, 2025 07:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் பராசக்தி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத செடல் திருவிழா, கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் சுமந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
25ம் தேதி சாகை வார்த்தல், தீபாராதனை நடந்தது. அதில் அய்யப்பன் எம்.எல்.ஏ., டாக்டர் பிரவீன் அய்யப்பன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி னர்.
முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், சுதன் பவர்டெக் பூங்குன்றன், பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.