/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளிக்கு இருக்கைகள் எம்.எல்.ஏ., வழங்கல்
/
பள்ளிக்கு இருக்கைகள் எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : டிச 22, 2024 09:15 AM
சிதம்பரம் : சிதம்பரம் அடுத்துள்ள வல்லத்துறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு இருக்கைகளை பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
சிதம்பரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சம் மதிப்பில், வல்லத்துறை அரசு மேல்நிலை பள்ளிக்குபெஞ்ச் மற்றும்டெஸ்க் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு உறுப்பினர் சேதுமாதவன் தலைமை தாங்கினார்.
பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்று, ரூ. 5 லட்சம் மதிப்பில், பள்ளி தலைமை ஆசிரியர் அருணாதேவியிடம் பெஞ்ச் மற்றும் டெஸ்க் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சுந்தரமூர்த்தி, அமுதா ரவிச்சந்திரன், வெற்றிச்செல்வி, மணிமாறன், ராமலிங்கம், மணி, சுந்தரம், மோகன், பழனி, ஸ்ரீதர், அறிவுசெல்வி, அண்ணாதுரை, தினேஷ்,மாலதி, நக்கீரன் மற்றும் மாணவர்கள்,ஆசிரியர்கள் பங்கேற்றனர்.