/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளியில் சமையல் கூடம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
/
பள்ளியில் சமையல் கூடம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
ADDED : பிப் 02, 2025 05:03 AM

பண்ருட்டி, : பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் சத்துணவு கூடம் கட்டப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.
எம்.எல்.ஏ.,சபா ராஜேந்திரன் திறந்து வைத்தார். முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், பி.டி.ஒ., சங்கர், பணிமேற்பார்வையாளர் யுவராணி, கூட்டுறவு சங்க தலைவர் தனபதி, முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகம், தலைமை ஆசிரியர் முருகவேல், ஆசிரியர் ஜெயராமன், தி.மு.க., கிளை செயலாளர் தமிழ்ச்செல்வன், ஊராட்சி செயலாளர் நந்தகோபால், ஒப்பந்ததாரர் பரமதேவன், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சிங்காரவேல், சங்கர் ஆறுமுகம் ,ரவி, வாசுதேவன், சொக்கலிங்கம், வீராசாமி, மாயவேல், தனவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.