/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய நாடக மேடை எம்.எல்.ஏ., திறப்பு
/
புதிய நாடக மேடை எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : ஜூலை 23, 2025 06:56 AM

சேத்தியாத்தோப்பு: ஊ. ஆதனுார் ஊராட்சியில் புதிய நாடக மேடை கட்டடம் திறப்பு விழா நடந்தது.
புவனகிரி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊ.ஆதனுார் ஊராட்சியில் புதிய நாடக மேடை கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.
அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி புதிய நாடக மேடை கட்டடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
கம்மாபுரம் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் முனுசாமி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், மாநில துணை செயலாளர் அருளழகன், சேகர், ஒன்றியபேரவை செயலாளர் செல்வன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன், மகளிரணி வெங்கடேஸ்வரி, கிளை செயலாளர்கள் ராஜ்குமார், ராமமூர்த்தி பங்கேற்றனர்.