/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சமத்துவ பொங்கல் விழா எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
சமத்துவ பொங்கல் விழா எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : ஜன 14, 2025 11:53 PM

நெய்வேலி: நெய்வேலியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார்.
நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே உள்ள ஸ்ரீராம் நகர் பூங்காவில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. சிறுவர்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் மற்றும் பெண்களுக்கான கோலப் போட்டிகள் நடந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார்.பெண்களுக்கு இலவச சேலை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களை எம்.எல்.ஏ., வழங்கினார்.
நிகழ்ச்சியில் பண்ருட்டி ஒன்றிய முன்னாள் சேர்மன் சபா பாலமுருகன், ஒன்றிய செயலாளர் குணசேகர், அவைத் தலைவர் ராமச்சந்திரன், தி.மு.க., நிர்வாகிகள் ஸ்ரீதர், வாஜித், பிச்சையா, அந்தோணி தாஸ், கோபால், ராஜபூபதி, வடக்குத்து ஊராட்சி செயலாளர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.