/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'யார் அந்த சார்' ஸ்டிக்கர் எம்.எல்.ஏ., ஒட்டினார்
/
'யார் அந்த சார்' ஸ்டிக்கர் எம்.எல்.ஏ., ஒட்டினார்
ADDED : ஜன 14, 2025 11:33 PM

சிதம்பரம்: சிதம்பரம் அ.தி.மு.க., சார்பில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் 'யார் அந்த சார்' வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை, பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமையில் அ.தி.மு.க., வினர் ஒட்டினர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், 'யார் அந்த சார்' என்ற கேள்விக்கு பதில் சொல்ல மறுக்கும் தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் 'யார் அந்த சார்' என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி சிதம்பரத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில் 'யார் அந்த சார்' என்ற ஸ்டிக்கரை ஒட்டி துவக்கி வைத்தார். அதனையடுத்து. கட்சியனர் பலர் இரு சக்கர வாகனங்களில் ஒட்டினர். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், அவைத்தலைவர் குமார், தில்லை கோபி, நகர துணை செயலாளர் அரிசக்தி மற்றும் கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

