/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காயமடைந்த விவசாயிக்கு எம்.எல்.ஏ., நேரில் ஆறுதல்
/
காயமடைந்த விவசாயிக்கு எம்.எல்.ஏ., நேரில் ஆறுதல்
ADDED : ஆக 20, 2025 11:03 PM

சேத்தியாத்தோப்பு, ; சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவியில் என்.எல்.சி., மத்திய பாதுகாப்பு படை வீரர் தாக்கியதால் காயமடைந்த புவனகிரி எம்,எல்.ஏ., நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த மேல்வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன்,50; விவசாயி. கடந்த 18 ஆம் தேதி இரவு 7.00 மணியளவில் ஆயிகுளம் பகுதியில் உள்ள வாய்க்கால் கரையோரம் இயற்கை உபாதை கழிப்பதற்கு சென்றார்.
அங்கு பணியிலிருந்த என்.எல்.சி., நிறுவன மத்திய பாதுகாப்பு படை வீரர் சீனிவாசனை தடுத்து குடிபோதையில் தாக்கியதில் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது.காயமடைந்த சீனிவாசனை அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது ஒன்றிய அவைத்தலைவர் செல்வராசு ஜெயசீலன், ஒன்றிய துணை செயலாளர் பிரித்திவி, அண்ணாதொழிற்சங்க நிர்வாகி சரவணன், ஜெ., பேரவை செயலாளர் ராஜாசாமிநாதன் உட்பட அ.தி.மு.க., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.