ADDED : செப் 25, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு ஊராட்சியை சேர்ந்தவர் நடேசன். இவரது, கூரை வீடு நேற்று முன்தினம் தீப்பிடித்துஎரிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார்.
அவருடன், அ.தி.மு.க., ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், ஊராட்சிதலைவர் சிவசங்கரி ராம் மகேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் அசோகன், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், பூவாலை ஊராட்சி தலைவர்செல்லப்பன், நிர்வாகிகள் கோதண்டம், சாமியப்பன், ராமையன் உட்பட பலர் பங்கேற்றனர்.