/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புயல் நிவாரண பொருட்கள் எம்.எல்.ஏ., அனுப்பி வைப்பு
/
புயல் நிவாரண பொருட்கள் எம்.எல்.ஏ., அனுப்பி வைப்பு
ADDED : டிச 18, 2024 07:17 AM

கடலுார் : புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அய்யப்பன் எம்.எல்.ஏ., வாகனங்களில் அனுப்பி வைத்தார்.
பெஞ்சல் புயலால் வெள்ளப்பாக்கம் மற்றும் மருதாடு ஊராட்சி பகுதிகள் பாதிக்கப்பட்டது. இப்பகுதிகளுக்கு அரிசி, போர்வை, புடவை உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்களை நான்கு வாகனங்கள் மூலம் அய்யப்பன் எம்.எல்.ஏ., அனுப்பி வைத்தார்.
ஊராட்சி தலைவர்கள் மனோகர், பிரகாஷ், மாநகராட்சி மகேஸ்வரி விஜயகுமார், சுமதி ரங்கநாதன், ஊராட்சி துணைத் தலைவர் சாந்தி முன்னிலை வகித்தனர்.
அப்போது, முன்னாள் கவுன்சிலர் சேகர், முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஓய்வு பெற்ற பி.டி.ஓ., ஆனந்ததுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.