சி.கொத்தங்குடி பள்ளியில் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு
சி.கொத்தங்குடி பள்ளியில் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு
ADDED : செப் 19, 2026 03:51 PM
சிதம்பரம், செப். 20–
சி.கொத்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
சிதம்பரம் அடுத்த சி.கொத்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கடந்தாண்டிற்கு முன் 6 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்தததால் பள்ளியை மூட ஏற்பாடுகள் நடைபெற்றது.
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தலைமை ஆசிரியரின் தொடர் முயற்சியால் மாணவர் சேர்க்கை அதிகரித்து தற்போது 23 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அதனையறிந்த தமிமும்ன அன்சாரி, நேற்று முன்தினம் சி.கொத்தங்குடி அரச பள்ளியை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர் சேர்க்கையை அதிகரித்த தலைமை ஆசிரியர் ஈஸ்வரியை பாராட்டினார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மேலும் பள்ளியில் சேதமடைந்துள்ள கட்டிடம், மண் தரையை சிமெண்ட் தரையாக மாற்றுதல், பள்ளியின் சுற்றுசுவர் மீது கம்பி வேலி அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து ஒன்றிய பொறியாளரை அழைத்து உடனடியாக திட்டமதிப்பீடு தயார் செய்ய உத்திரவிட்டார்.
அப்போது ம.ஜக., மாவட்ட செயலாளர் ஜாகீர்உசேன், மாணவர் அணி மாநில செயலாளர் பைசல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
