தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலுார் சிறையில் மொபைல் பறிமுதல்

கடலுார் சிறையில் மொபைல் பறிமுதல்

கடலுார் சிறையில் மொபைல் பறிமுதல்


ADDED : அக் 22, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 06:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மத்திய சிறையில் கேட்பாரற்று கிடந்த மொபைல் போனை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

கடலுார் மத்திய சிறையில் சிறைக்காவலர்கள் நேற்று (அக்.,21) கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, தொகுதி–1ல் மதில் ஓரமாக ஏதோ ஒரு பொருள் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு கேட்பாரற்று கிடப்பதை கண்டுபிடித்து பிரித்து பார்த்தனர். அதில், ஒரு மொபைல், 2 பேட்டரிகள் இருப்பது தெரிந்தது. உடன், அவைகளை பறிமுதல் செய்து, சிறை அலுவலர் விக்னேஷிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து சிறை அலுவலர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் இன்று (அக்.,22) வழக்குப் பதிந்து, மொபைல் போன், 2 பேட்டரிகளை வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us