ADDED : ஜன 03, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் மத்திய சிறையில் கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறை வளாகம் முழுதும் சிறப்பு குழுவினர் சோதனையிட்டனர்.
அப்போது, உபயோகம் இல்லாத பொருட்கள் வைக்கும் அறையில் மொபைல் போன், பேட்டரி இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிறை அலுவலர் ரவி அளித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.