ADDED : டிச 07, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் அருகே மொபைல் போன் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் அடுத்த பெரியகங்கணாங்குப்பத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 43. இவர், கடந்த நவ., 28ம் தேதி, முள்ளோடையில் காய்கறி வாங்கிக்கொண்டு ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றின் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் வந்த மூன்று நபர்கள் சத்தியமூர்த்தியை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த மொபைல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
அப்போது, திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த சூர்யா,29, என்பவர் மொபைல் போன் திருடியது தெரியவந்து கைது செய்தனர்.